| இந்தப் பாடம்
பல துறைகளிலும் வல்லவராகிய அறிஞர்
அண்ணாவின் சிறுகதைகளின் பல்வேறு
சிறப்பியல்புகளை
விளக்கிக் காட்டுகிறது. 1934 முதல் 1966 வரையுள்ள காலத்தில்
அண்ணாவின் சமூகச் சிந்தனையோட்டம்
அவரது
புனைகதைகளில் எவ்வாறு பதிவாகியுள்ளது
என்பதைக்
காட்டுகிறது. சாதி, மத, பொருளாதார,
பால்
வேறுபாடுகளால் ஒடுக்கப்படும் மக்களின்
உயர்வுக்காகவே
அண்ணா எழுதினார் என்பதைப்
புலப்படுத்துகிறது.
|