5.0 பாட முன்னுரை

    தற்கால இலக்கிய வகைகளுள் சிறுகதையும் புதினமும்
வளர்ந்து வரும் சிறந்த இலக்கியவகை ஆகும். இளநிலைப்
பட்டம் தமிழியல் பகுதி II-இல் 6 சிறுகதைகள் பற்றிய பாடங்கள்
உள்ளன. அவை,

  • ஆர்.சூடாமணியின் சிறுகதைகள்
  • தி.ஜானகிராமனின் சிறுகதைகள்
  • அண்ணாவின் சிறுகதைகள்
  • சு.சமுத்திரத்தின் சிறுகதைகள்
  • பிரபஞ்சன் சிறுகதைகள்
  • அம்பையின் சிறுகதைகள்

    மேற்கூறிய பாடங்களில் முதல் நான்கு பாடங்கள் படித்து
விட்டோம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பற்றி இப்போது
பார்ப்போமா?