பாடம் 1

P10141 : கி. ராஜநாராயணனின் புதினங்கள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழ் நாவல் ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்
கி. ராஜநாராயணன். இந்தப் பாடம் கி. ராஜநாராயணனை
அறிமுகம் செய்கிறது. அவர் எழுதிய கோபல்ல
கிராமத்து மக்கள்
எனும்     புதினத்தின் வழி
வெளியிடப்படும் அவருடைய சமுதாயப் பார்வை, பாத்திரப்
படைப்பு, நடைத்திறன் ஆகியவற்றையும் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப்
பெறலாம்.

கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்து மக்கள்
எனும் புதினத்தின் மூலம், சமூகத்தில் நிலவிய பல்வேறு
பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
குடும்பம், வாழ்க்கை, சமுதாயம் பற்றிய மதிப்பீட்டை
அறியலாம்.
கி.ரா. வின் நடையில் காணப்படும் எளிமை, உவமை,
பழமொழி, வர்ணனை, வட்டார வழக்கு ஆகியவற்றை
அறிந்து கொள்ளலாம்.