அசாம் மாநிலத்தில் அங்கிய
நாடக் என்னும் இசை
நடனம் மகிழ்ச்சிப் பின்னணியை உடையது.
கீர்த்தன்ய நாடக் என்னும் இசை நடனம் மெசில்லா
என்னும் பகுதியில் வழக்கத்தில் இருந்திருக்கிறது.
மணிப்பூரில் மணிப்புரி நடனம்
வழக்கத்தில் இருக்கிறது.
வங்காளத்தில் பல்வகை இசைப்பாட்டு நாடகங்களே
தொடக்கத்தில் நடத்தப் பெற்றன. இன்றும் இசைப்பாட்டு
நாடகங்கள் அங்கும் சிறப்புற நடத்தப்படுகின்றன.
ஒரிசா மாநிலத்தில் பல பகுதிகளில், ஜாத்திரா என்னும்
இசை நாடகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
காஷ்மீர், பஞ்சாப், சிந்து, இராஜஸ்தான், குஜராத் ஆகிய
மாநிலங்களில் இசை நாடகங்களே நடத்தப்படுகின்றன.
ஆந்திர மாநிலத்தில் வீதி நாடகமும்,கர்நாடக மாநிலத்தில்
யட்சகானமும், கேரளத்தில் கதகளியும், தமிழகத்தில்
தெருக்கூத்தும் இசைப்பாட்டு நாடக வடிவங்களே ஆகும்.