|
சங்கம் மருவிய காலம்
வரையில் சிறப்பாக இருந்த
நாடகக் கலை களப்பிரர்
காலத்தில் வீழ்ச்சியுற்றது. சமண
சமயமும் பௌத்த சமயமும்
தமிழ்நாட்டில் நன்கு பரவிய
காலம் களப்பிரர் காலம்.
நாடகம் கூத்து போன்ற
கலைகளை இச்சமயங்கள்
புறக்கணித்தன. இக்கலைகள்
மனிதர்களின் கீழ்த்தரமான
இச்சைகளைத் தூண்டுவன
என்று சமணரும் பௌத்தரும் கூறினர்.
|