3.6 தொகுப்புரை

    திரைப்படம், தொலைக்காட்சி போன்றவற்றால்நாடகம்
நலிவடைந்த நிலையில் இருந்தாலும் முற்றிலுமாக இது
அற்றுப்போய் விடவில்லை. இந்த நிலையில் நாடக
வகைப்பாடுகளை அறிந்து கொள்வது மீண்டும் நாடக
எழுச்சியை எவ்வாறு ஏற்படுத்தலாம் எனச் சிந்திப்பதற்குத்
தூண்டுகோலாய் அமையும்.

    இப்பாடம் மூலம் நாடகத்தின் பெரும் பிரிவுகளையும்
உட்பிரிவுகளையும் அறிந்து கொண்டோம்.
 
1)

தமிழில் எழுதப்பட்ட முதல் துன்பியல் நாடகம்
எது? எழுதியவர் யார்?

(விடை)
2)
இசைப்பாட்டு நாடகங்களுக்கு     இரண்டு
எடுத்துக்காட்டுகளைத் தருக.
(விடை)
3)
தமிழில் முதல் கவிதை நாடகத்தை எழுதியவர்
யார்?
(விடை)
4) நவாப் இராஜமாணிக்கம் எழுதி நடித்த கிறித்தவ
நாடகத்தின் பெயர் என்ன?
(விடை)
5)
அலிபாதுஷா நாடக ஆசிரியரின் பெயர் யாது?
(விடை)