P10233 நாடக வகைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    நாடகம் பல வகைப்படும். எந்தெந்த வகைகளில்
நாடகத்தைப் பகுத்துப் பார்க்கலாம் என்பதை இந்தப் பாடம்
சொல்கிறது.

    உலக நாடகங்களின் இருபெரும் பிரிவுகள் எவை
என்பதை இந்தப் பாடம் சொல்கிறது.

    இருபதாம் நூற்றாண்டு நாடக வகைகளைப் பற்றி இந்தப்
பாடம் சொல்கிறது.

    இலக்கியம் என்னும் நிலையில் நாடகத்தை எவ்வாறு
வகைப்படுத்தலாம் என்பதை இந்தப் பாடம் சொல்கிறது.

    நாடக வகைகளில் பெரியோர் நாடகம், குழந்தை நாடகம்
ஆகியவற்றின் நுட்பமான வேறுபாட்டை இந்தப் பாடம்
சொல்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • நாடகங்களை எந்த எந்தப் பகுப்பினுள் அடக்கலாம்?
    அவற்றை எவ்வாறு வகைப்படுத்தலாம்? தமிழ்
    நாடகங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன?
    உலக     நாடகங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்
    பட்டிருக்கின்றன என்பதை அறிந்து பயன் பெறலாம்.
  • சிறுவர் நாடகம், பெரியோர் நாடகம் என்னும்
    பகுப்பினுள் சிறுவர் நாடக அமைப்பு முறையை அறிந்து
    நாமும் நாடகம் எழுதிப் பயன் பெறலாம்.
  • இலக்கிய நிலையில் மட்டும் தமிழ் நாடகங்கள் ஐந்து
    வகையாகப் பகுக்கப்பட்டிருப்பதை அறிந்து நாமும்
    ஏதேனும் ஒரு வகையில் எழுதப் பழகலாம்.
  • வடிவ நிலையில் ஓரங்க நாடகம், குறுநாடகம்,
    பெருநாடகம் எனப் பகுக்கப்பட்டிருப்பதை அறிந்து நாமும்
    நாடகம் படைக்கப் பயிற்சி பெறலாம்.