|
மனோன்மணீய நாடகத்தில் இடம்பெறும் முக்கியப்
பாத்திரப் படைப்புகளாகப் பின் வருபவர்களைக் கூறலாம்.
| சீவக வழுதி |
- |
பாண்டிய நாட்டு அரசன் |
| மனோன்மணி |
- |
சீவக வழுதியின் மகள் |
| சுந்தரமுனிவர் |
- |
சீவக வழுதியின் குலகுரு |
| குடிலன் |
- |
சீவக வழுதியின் முதல் மந்திரி |
| நிட்டாபரர் கருணாகரர் |
- |
சுந்தர முனிவரின் சீடர்கள் |
| வாணி |
- |
மனோன்மணியின் தோழி |
| நடராசன் |
- |
வாணியின் காதலன் |
| நாராயணன் |
- |
சீவக வழுதியின் துணைவன் |
| பலதேவன் |
- |
குடிலனின் மகன் |
| சகடன் |
- |
வாணியின் தந்தை |
| புருடோத்தமன் |
- |
சேரநாட்டு மன்னன் |
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை ஒவ்வொரு பாத்திரத்தையும்
அதனதன் தேவைக்கு ஏற்பத் திட்டமிட்டு அமைத்து இருக்கிறார்.
கதைப் போக்கின்படி ஒவ்வொருவரும் எந்த எந்த இடத்தில்
வரவேண்டுமோ அந்தந்த இடத்திலேயே வருகின்றனர்;
எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவே பேசுகின்றனர்.
காதலனாய், காதலியாய், தூதுவனாய், இயற்கையின்
இரசிகனாய்,
அருள் சுரக்கும் உள்ளத்தினனாய், அறிவுத்
திறம் மிக்கோனாய்,
சூழ்ச்சியில் வல்லவனாய், சூதுமதி
படைத்தவனாய் எனப் பல
பண்புகள் கொண்ட பாத்திரப் படைப்புகள் நாடகத்துக்குள்
அமைந்து அழகும் கலையும் சேர்க்கின்றன.
அவற்றை
ஒவ்வொன்றாகக் காண்போம். |