P10234 பெ. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்த நாடகம் தமிழரின் வீரப் பண்புகளைப் பேசுகிறது.
தமிழரின் இயற்கை ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது. நிலையாமைத்
தத்துவத்தைப் பேசுகிறது. தமிழர்கள் பொதுவாகத் துன்பியலை
விடவும் இன்பியலையே போற்றுவார்கள் என்னும் உண்மையை
இந்நாடகம் வெளிப்படுத்துகிறது.

    தூயவனுக்குத் தீயவனால் வரும் சோதனையும், அதில்
தூயவன் வெற்றி பெறுவதும் கூறப்படுகிறது. தீயவனாகிய
குடிலனின் சூழ்ச்சியும், தூயவனாகிய சீவக மன்னனின் பண்பு
இயல்புகளும் இப்பாடத்தில் சுட்டப் படுகின்றன.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • ஆங்கில நாடகம் போல் அங்கம் களம் என அமைத்து,
    தமிழ் நாடகத்தில் புதிய அமைப்பு முறையினை
    அறிமுகப்படுத்துவதை அறியலாம்.
  • காதல், வீரம், இயற்கை ஈடுபாடு, தத்துவம் ஆகிய வற்றில்
    ஒவ்வொன்றின் சிறப்பினையும் தெரிந்து கொள்ளலாம்.
  • குடிலன் போன்ற பாத்திரப் படைப்பின் மூலம் பேராசிரியர்
    சுந்தரம் பிள்ளையின்     படைப்பாற்றலைத் தெரிந்து
    கொள்ளலாம்.