2.0 பாட முன்னுரை

    பாரதியார் பாட்டுக்கொரு புலவன்; வையம் பாலித்திடக்
கவிச்சிறகு விரித்தவன். மனிதச்சிந்தனையில் நாட்டு விடுதலை நீர்
பாய்ச்சியவன். மனிதநேயம் மதிக்கப்பட முரசுகொட்டியவன்.
எளிய, இனிய உரைநடை, கவிதை கொண்டு நாட்டு
விடுதலையுடன் பெண்விடுதலையும் வேண்டிய நவயுகக் கவிஞன்.
அவன், ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ என்று பாடியுள்ள பாடலின்
சிறப்பை இங்கே காணலாம்.