|
பயிர், செடி, கொடி, மரம், மனித உயிர்கள், விலங்குகள்,
பறவைகள் ஆகியவற்றிற்கு அடிப்படை ஆதாரமாக எப்படி நீர்
இருக்கின்றதோ, அதுபோல உயிரை இயக்க மொழி
அவசியமாகின்றது. அந்தச் சக்தியைத் தருவது தாய்மொழி.
தாய்மொழியாம் தமிழ்மொழியை அமிழ்தம் என்று பாவேந்தர்
பாடியதைப்போல (தமிழுக்கும் அமுதென்று பேர்) நாமக்கல்
கவிஞரும்,
தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று
வருகின்ற அதுவந்து சேரும்
(நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம்
- 19)
என்று தமிழ்மொழியின் பெருமையை உணர்ந்து பாடுகின்றார்.
|