p10311 இக்காலக் கவிதைகள் - ஓர் அறிமுகம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மிகப் பழைய தமிழ் இலக்கியமாகிய சங்க இலக்கியங்கள்
கவிதை வடிவில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். கற்பனையும்
சொற்கட்டமைப்பும் இணையும் போது அழகிய கவிதை
உருவாகிறது. யாப்பிலக்கணம் கவிதை அமைப்பை விளக்குகிறது.
காலப்போக்கில் கவிதையின் கட்டமைப்பும் சொல்லாட்சியும்
சிறிது சிறிதாக மாறத் தொடங்கின. மேலை நாட்டினரின்
தொடர்பினால் கவிதையிலும் மாற்றங்கள் இடம்பெற்றன.
எனவே பழைய கவிதைகள் மரபுக் கவிதை என்றும் புதிய
கவிதைகள் புதுக்கவிதை என்றும் பெயர் பெற்றன. இந்த
விளக்கங்களை இப்பாடம் எடுத்துக் கூறுகிறது.

    பாடுபொருள், உத்தி, படிமம், குறியீடு முதலியவற்றை
விளக்கி, புதுக்கவிதையின் முழுவடிவத்தை நமக்கு விளக்குகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
கவிதையின் பொதுவான விளக்கத்தைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
மரபுக்கவிதைக்கும், புதுக்கவிதைக்கும்     உள்ள
வேறுபாட்டினை அறியலாம்.
புதுக்கவிதையின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் அறிந்து
கொள்ளலாம்.
புதுக்கவிதையின் முன்னோடிகளைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
புதுக்கவிதையின் பல்வேறு வடிவங்களையும், பிரிவுகளையும்
அறிந்து மகிழலாம்.