P10326 குறும்பாக்கள் (மஹாகவி, மீரா,
ஈரோடு தமிழன்பன் கவிதைகள்)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    இந்தப் பாடம் தமிழில் புதிதாய்த் தோன்றிய குறும்பா
என்னும் கவிதை வடிவம் பற்றியது. குறும்பா என்பது என்ன
என்று இப்பாடம் விவரிக்கிறது. சிறந்த குறும்பாக்களைப்
படைத்த மஹாகவி, மீரா, ஈரோடு தமிழன்பன் ஆகிய
கவிஞர்களைப் பற்றியும் அவர்களின் குறும்பாக்கள் பற்றியும்
விளக்கி உள்ளது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

     இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

குறும்பா பற்றிய செய்திகளை அறியலாம்.
தமிழில் முதன்முதலில் குறும்பா படைத்த மஹாகவி
பற்றியும் அவரது குறும்பாக்கள் பற்றியும் அறியலாம்.
மீரா பற்றியும் அவரது குறும்பாக்கள் பற்றியும் அறியலாம்.
ஈரோடு தமிழன்பன் பற்றியும் அவரது குறும்பாக்கள்
பற்றியும் அறியலாம்.
குறும்பாக்களின் சிறப்புத் தன்மைகளை உணரலாம்.