தமிழ் மொழியில் உள்ள சிற்றிலக்கிய வகைகளில்
ஒன்று தூது இலக்கியம் என்பதையும், தூது இலக்கியத்தில்
இடம் பெறும் நூல்களில் ஒன்று தமிழ்விடு தூது ஆகும்
என்பதையும் இப்பாடம் எடுத்துக் கூறுகிறது.
தமிழ்விடு தூது பற்றிய குறிப்புகளையும், தமிழ்விடு தூது
நூலின் அமைப்பையும் இந்தப் பாடம் சுருக்கமாகக்
கூறுகின்றது.
தமிழ்விடு தூது நூல் தமிழ் மொழியின்
பெருமைகள்,
சோமசுந்தரக் கடவுளின் பெருமைகள்,
தூது அனுப்பும்
தலைவி தமிழ் மொழியைத் தூது விடுவதன் காரணங்கள்,
பிற பொருட்களைத் தூது அனுப்பாததன் காரணங்கள்,
தூதுப்பொருள் செய்ய வேண்டுவன, செய்யக்கூடாதன,
தலைவியின் தூதுச் செய்தி முதலிய செய்திகளை விரிவாக
விளக்குகிறது.