தமிழ்மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று மடல் இலக்கியம். மடல் இலக்கியங்களில் ஒன்று பெரிய திருமடல் ஆகும். இந்தப் பெரிய திருமடல் என்ற இலக்கியத்துள் இடம்பெறும் செய்திகளை இந்தப் பாடம் விளக்குகின்றது.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களுள் இன்பம் சிறந்தது என்பது விளக்கப் படுவதைக் காட்டுகின்றது.
பாட்டுடைத் தலைவனின் பல்வேறு பெருமைகளை எடுத்துக் காட்டுகின்றது.
மடல் ஏறத் துணியும் தலைவியின் நிலை விளக்கப் படுகின்றது.
மடல் ஏறத் துணிவதற்கான காரணம் சுட்டப்படுகின்றது.
|