உழையும் வெங்காளமும் போலும்
கண் (99)
(உழை = மான் ; வெங்காளம் = விஷம்) பொய்போலும் இடையாய்
(137)
தலைவின் உறுப்புகளுக்கு உவமையாகக் கூடிய பூ,
வண்டு போன்ற பொருட்களுக்குத் தலைவியின் உறுப்புகளையே
உவமையாகக் கூறுகிறார்.
வண்டை, நல்லார் விழிபோல் இருந்தும் (8)
(நல்லார் = பெண்கள்)
என உவமை செய்கிறார்.
மற்றொரு சிறப்பான உவமை ! தலைவனின் காதல்நோய்
கண்ட பாங்கன் அவனை, ‘சிலந்தி வலையைக் கொண்டு
கட்டப்பட்டதற்காக, ஒருபோர் யானை புலம்பி
நைந்தால் போல,
ஒரு பெண் தன் கொங்கையால் அணைக்க நீ
வருந்தினாய்’
என்று பழிக்கிறான்.
வலிமையான யானையைச் சிலந்திநூல் கொண்டு
அடக்க முடியாது; மனவலிமை மிக்க தலைவனை ஒரு
பெண்ணின் காதல் வருத்தப்படுத்த முடியாது என்பது
உவமையின் கருத்து.
சிலம்பிமென்னூல் கொண்டு சுற்றவெற்றிப்
போரார் களிறு புலம்பிநைந்தாங்கு ஒரு பூவைகொங்கை
வாரால் அணைப்ப வருந்தினை நீ ........................... (44)
(சிலம்பு = மலை ; சிலம்பி = சிலந்திப்பூச்சி; நைந்தாங்கு =
நைந்தது போல; கொங்கை வார் = வாரால் கட்டிய மார்பு)
|