இம்மன்னன் பெருமைக்காக முடி சூட்டிக்கொள்ளவில்லை.
இவ்வுலகைக் காக்கவே முடிசூட்டி ஆட்சி புரிந்தான் எனும்
கருத்தில்,
மூன்று முரசு முகில்முழங்க-நோன்றலைய
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்து (56-57)
என்கிறார் ஒட்டக்கூத்தர்.
நீர் நிறைந்த ஏழுகடல்களும் நிலத்தில் உள்ள ஏழு
தீவுகளும் பொதுவென்று சொல்வதை நீக்கி, தன்னுடைய
போர்க்குரிய சக்கரத்தால் வென்று தனக்கே உரிமையாக்கிக்
கொண்டவன். வட்ட வட்டமாகச் சூழ்ந்திருக்கும் ஏழு தீவுகள்
இறலி, சூசை, கிரவுஞ்சம், சம்பு, புட்கரம், கமுகு, தெங்கு
என்பனவாம். ‘உலகமேழுடைய பெண்ணணங்கு, பெண்
சக்கரவர்த்தி’ என்று விக்கிர சோழன் பட்டத்துத் தேவியைக்
குறிப்பிடுகின்றார். இவனுடைய பட்டத்து யானை தானே
முழங்குவதல்லால் தனக்கெதிராக வானமே முழங்கினாலும்
அவ் வானத்தைத் தடவி அதற்குப் பட்டமும் கொம்பும் வலிய
துதிக்கையும் இல்லையெனக்கண்டு சினம் தணியும். ஈழமண்டலம்,
சேரமண்டலம், மாளுவநாடு இவற்றையெல்லாம் வென்று
ஆள்பவன் விக்கிரம சோழன். மன்னர் பலர் வந்து அவன்
பாதத்தில் வணங்கும்போது அவர் முடிமேற்பட்டுக் கழல்
ஒலிப்பதால்.
முடிமேல் ஆர்க்கும் கழற்கால்
என்கிறார் ஒட்டக்கூத்தர்.
|