|
குடும்பத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் சகோதரர்
ஒற்றுமை, பெரியோரிடத்து நடக்கும் முறை முதலியன இளம்
பருவத்திலேயே ஒவ்வொருவரும் பயில வேண்டும் என்பதை
வலியுறுத்துகிறது இச் சதகம். கூடப் பிறந்தவர் அடையும் துயர்
தமது துயர், அவர்கள் கொள்சுகம் தம் சுகமெனக் கொண்டும்,
அவர் புகழும் பழியும், தமக்குற்ற புகழும் பழியும் போலக்
கொண்டும் வாழ வேண்டும் என்று சகோதரர் ஒற்றுமையை
வலியுறுத்துகிறது. (4)
குடும்பத்தில் எப்படிப் பொருள் சேர்க்க வேண்டும்,
எப்படிச் செலவழிக்க வேண்டும் என்றும் குடும்பம் எப்படி நடத்த
வேண்டும் என்றும் கூறும் ஒரு பாடலைப் பாருங்கள்.
புண்ணிய வசத்தினால் செல்வமது வரவேண்டும்
பொருளை ரட்சிக்க வேண்டும்
புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து
போதவும் வளர்க்க வேண்டும்
உண்ண வேண்டும் பின்பு நல்ல வஸ்த்ராபரணம்
உடலில் தரிக்க வேண்டும்
உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்குதவி
ஓங்கு புகழ் தேட வேண்டும்
மண்ணில் வெகு தர்மங்கள் செய்ய வேண்டும் (7)
(ரட்சித்தல் = பாதுகாத்தல்; வஸ்த்ராபரணம் = ஆடைகளும்
அணிகளும்; தமர் = தம்மவர், உறவினர்; ஆதுலர் =
வறியவர்)
|