| |
இச்சதகத்தின்கண் உள்ள நூறு செய்யுட்களும் சிறந்த
பொருள்களை மிக எளிதாய்ப் புகட்டுகின்றன. குடும்பத்துக்கு
வேண்டப்படும் சகோதரர் ஒற்றுமை, பெரியோரிடத்து நடக்கும்
முறை முதலியன இளம் பருவத்திலேயே ஒவ்வொருவரும்
அறிய வேண்டுவனவாம். அரசர், வளோளர், வைசியர்
(வணிகர்) மறையோர் சிறப்புகள் பேசப்படுகின்றன. இல்லறம்,
நன்மக்கட்பேறு, நன்மாணாக்கர் இயல்பு, நல்வினை செய்தோர்,
மலோன பொருள் ஆகியன பற்றி நூல் எடுத்துரைக்கிறது. செய்யத்தக்கவை, செயற்கு அருஞ்செயல் அவரவரிடத்து
நடக்கும் முறை, பகை கொளத் தகாதவர், பொருள்
செயல்வகை பற்றியும் விவரிக்கிறது.
உதவியின்றிக் கெடுவன இவையென்பதும், குறைவுற்றும் குணம்
கெடாமை பற்றியும், குணத்தை விட்டுக் குற்றத்தைக் கவர்தல்
பற்றியும், விவரிக்கிறது. ஊழின் வலிமை பற்றியும், ஒளியின்
உயர்வு பற்றியும், கற்பு மேம்பாடு பற்றியும், நற்சார்பு பற்றியும்,
பிறவிக் குணம் மாறாமை பற்றியும் பேசுகின்றது. வறுமையின்
கொடுமையையும், கோபத்தின் கொடுமையையும் விளக்குகிறது.
யாக்கை நிலையாமை பற்றியும் தருமம் பற்றியும்
எடுத்துரைக்கின்றது.
|