கோபத்தின் கொடுமையையும், வறுமையின் கொடுமையையும்
இச்சதகம் விரிவாகச் சொல்லுகிறது.
கோபமே
பாவங்களுக்கெல்லாம் தாய் தந்தை, கோபமே குடி கெடுக்கும்,
கோபமே ஒன்றையும் கூடி வரவொட்டாது, கோபமே துயர்
கொடுக்கும், கோபமே பொல்லாதது, கோபமே சீர்கேடு,
கோபமே உறவு அறுக்கும், கோபமே பழி செய்யும், கோபமே
பகையாளி, கோபமே கருணை போக்கும், கோபமே ஈனமாம்,
கோபமே ஒருவரையும் சேர விடாமல் தடுத்து ஒருவனைத்
தனிமைப்படுத்தும்; கோபமே மறலி (எமன்) முன் கொண்டு
போய் நிறுத்தி, தீய நரகக்குழியினில் தள்ளுமாம். அதனால்
ஆபத்தெலாம் தவிர்த்து என்னை ஆட் கொண்டருளும்
அண்ணலே என்கிறது இச்சதகம். (87)
|