சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதகம் பற்றிச்
சொல்கிறது.
அறப்பளீசுர சதகம் பற்றிப் பேசுகிறது.
அந்நூலின் ஆசிரியரைப் பற்றிய செய்திகளைத்
தெரிவிக்கிறது. நிலையாமை, வறுமையின் கொடுமை, கோபத்தின்
விளைவு முதலியவற்றை விளக்குகிறது.
நல்ல நெறிகளைச் சுட்டிக்காட்டி, மனிதர்கள் மனிதர்களாக,
உயர்ந்தவர்களாக வாழ்வதற்குரிய வழிகளை எடுத்துக் கூறுகிறது.