4) கற்பனை நயத்துக்கு ஓர் எடுத்துக் காட்டுத் தருக.
    
    சிவன் பிரம கபாலத்திலே பிச்சையெடுத்து உண்ணும்
நிலை புராணங்களிலே    பேசப்படுகின்றது. அதைக்
காரைக்கால் அம்மையார் எப்படிக் கற்பனை செய்கிறார்
பாருங்கள்.

    கழுத்திலே அரவம் ஆட நீ பிச்சையெடுக்கச்
செல்லும்போது அதைப் பார்த்துப் பயப்படும் பெண்கள்
உனக்குப் பிச்சையிட மாட்டார்கள். எனவே நீ செல்லும்
போது, அச்சம் தரும் இந்தப் பாம்பை விட்டுவிட்டுச் செல்
என்கிறார்.

......... நின்னுடைய
தீய அரவொழியச் செல் கண்டாய் -தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விட அரவம் மலோட மிக்கு
- (57)