2) பாண்டியன் பரிசு-என்ற தலைப்பைக் கருத்தில் வைத்து,
புலமைப்பித்தன் எவ்வாறு பாராட்டுகிறார்?
    மன்னர்கள் புலவர்களுக்குப் பரிசில் தருவது என்பது
நெடுங்காலமாகத் தமிழகத்தில் நடந்துவரும் நடைமுறையாகும்.
ஆனால் புரட்சிக் கவிஞர் பாண்டியன் பரிசு என்னும் நூல்
எழுதியுள்ளமையால் பாண்டிய மன்னனுக்கே இவர் பரிசில்
தந்தவரானார் என்று கருத்துப்படப் பாடுகின்ற வரிகளைக்
கேளுங்கள்.

பாண்டியன் தனக்குமொரு பரி சென்று தந்த தமிழ்ப்
பாவேந்து முத்தமருளே
பாட்டான தமிழுக்கு நாட்டாண்மை தந்தவன்
பனி வாயின் முத்தமருளே
- (48)