1.1 சங்க காலம் - விளக்கம்

பல்லாயிரம் ஆண்டுக் காலப் பழமையான இலக்கிய
இலக்கணங்களைக் கொண்ட மொழியாகத் தமிழ் மொழி
விளங்குகின்றது. அதனால் அம்மொழி நீண்டகால இலக்கிய
வரலாற்றினைக் கொண்டிருக்கிறது. இதில் முதன்மையான
இலக்கிய வரலாற்றுக் காலம் சங்க காலமாகும்.