p10431 - சங்க இலக்கியம்- ஒர் அறிமுகம்
இந்தப் பாடம் சொல்கிறது?
இந்தப் பாடம் சங்க இலக்கியங்கள் பற்றிச் சொல்கிறது.
சங்கம் பற்றி விளக்கம் கூறுகிறது. முச்சங்கங்களின்
வரலாற்றைக் கூறுகிறது.

சங்க இலக்கியங்கள் பற்றி அறிமுகம் செய்கிறது.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது.
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது. சங்க
இலக்கியத்தின் யாப்புப் பற்றியும், உவமைகள் பற்றியும்
கூறுகிறது. சங்கப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள்,
வாழ்வியல் செய்திகள் ஆகியவற்றைக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
சங்கம் என்றால் என்ன என்பதை அறியலாம்.
முச்சங்கங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைப் பற்றித்
தெரிந்து கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களில் அக இலக்கியங்கள் எவை
என்பதையும், புற இலக்கியங்கள் எவை என்பதையும்
அறிந்து கொள்ளலாம்.
சங்க கால வரலாற்றுச் செய்திகளையும், வாழ்வியல்
செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.