களவாவது பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் காதல் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, செல்வநிலை முதலிய வற்றால் ஒப்புமை உடைய ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு யாருமறியாமல் காதலித்தல்.