| |
எட்டுத் தொகையுள் ஒரு நூலாகிய புறநானூறு பற்றி
எடுத்துரைக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின்
உலகியல் வாழ்க்கை பற்றிய உண்மைப் பதிவேடு ஆகவும்,
ஒப்பு இல்லாத உயர்ந்த இலக்கியமாகவும் இந்த நூல்
விளங்குவதை உணர்த்துகிறது.
அரசியல், கல்வி, அறம், அறிவியல் ஆகிய துறைகளிலும்
இலக்கியம், இசை போன்ற நுண்கலைகளிலும் அன்றைய
தமிழரின் நிலை பற்றி அறியப் புறநானூறு உதவுவதை
விளக்குகிறது. அன்பு அருள், நட்பு, வீரம், மானம், ஈகம்
(தியாகம்), ஈகை போன்ற பண்புகளில் அக்காலத் தமிழர்
சிறந்து விளங்கியதைப் புறநானூறு மூலம் எடுத்துக் காட்டுகிறது.
புறநானூற்றுப் பாடல்களின் இலக்கிய நலங்களை எடுத்து
விளக்குகிறது.
|