P10445 பாலைத் திணைப் பாடல்கள் - அறிமுகம் E
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள
பாலைத் திணைப் பாடல்களின்     அறிமுகம் பற்றியது.
பாலைத் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றை இப்பாடம் விவரிக்கிறது.

    பாலை நில மக்களுக்கு உரிய வாழ்க்கை ஒழுக்கங்கள்
முதலிய சிறப்புகளை இப்பாடம் விளக்குகிறது. கற்பனை,
சொல்லாட்சி, உவமை, உள்ளுறை முதலியன பாலைத்
திணைப் பாடல்களில் அமையும் முறையினையும் இப்பாடம்
விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

பாலைத் திணைக்கு உரிய முப்பொருள்களை அறியலாம்.
பாலைத் திணையில் முப்பொருள் வெளிப்பாடு எவ்வாறு
அமைந்து உள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம்
உணரலாம்.
பாலைத் திணைக்குரிய அக ஒழுக்கங்களான உடன்போக்கு,
செலவு அழுங்குவித்தல், நற்றாய் வருந்துதல், செவிலி
மகளைத் தேடிச் செல்லல், தலைவியை ஆற்றுவித்தல்
போன்றவற்றையும் அறம் பாராட்டல், மறவர் கொள்ளை
அடித்தல் போன்ற புற நிகழ்வுகளையும் அறியலாம்.
பாலைத் திணைப் பாடல்களில்     தோன்றும் கற்பனை,
சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய
நயங்கள் பற்றியும் அறியலாம்.