நல்லந்துவனார் பாடிய பரிபாடலில், தலைவி தோழியுடன்
வையை ஆற்றில் நீராடுகிறாள்.
இன்ன பண்பின்நின் தைந்நீ ராடல்
மின்னிழை நறுநுதல் மகள்மேம் பட்ட
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காமம்
(பரிபாடல், 11 : 34-136)
என்று தோழி கூறும் வரிகள் தலைவியின் கைக்கிளைக்
காமத்தைக் காட்டுகின்றன.
(தைந்நீராடல் = தை மாதம் வையை ஆற்றில் நீராடல்;
மின்னிழை = ஒளிவிடும் நகை; நறுநுதல் = மணம் மிக்க
நெற்றி)
தலைவி வையை ஆற்றில் தைநீராடக் காரணம் அவளது
கைக்கிளைக் காமம் என்கிறாள் தோழி. விரைவில் தலைவன்
ஒருவனை மணம்பெற வேண்டி நிற்கும் நிலை இங்குக்
கைக்கிளைக் காமம் ஆகிறது.
|