பாடம் - 3

p20113 மொழிபெயர்ப்பின் தன்மை

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மொழிபெயர்ப்பின் தேவை பற்றியும் மொழிபெயர்ப்பில்
ஈடுபடக் கூடியவர்கள் யார் என்பது பற்றியும் கூறுகிறது.

    மொழிபெயர்ப்பின் சிறப்பு, மொழிபெயர்ப்பாளனின்
தன்மை ஆகியவை பற்றியும் எடுத்துச் சொல்கிறது.

    மொழிபெயர்ப்பில் கவனிக்க வேண்டிய கூறுகளைப்
பற்றியும் குறிப்பிடுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
மொழிபெயர்ப்புப் பற்றிப் பல புதிய கருத்துகளை
அறியலாம்.
மொழிபெயர்ப்பாளனின் தன்மை, தகுதி ஆகியவற்றை
உறுதிப்படுத்தலாம்.
மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைவதற்காகக் கவனிக்கப்பட
வேண்டியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.