பாடம் - 5

p20115 மொழிபெயர்ப்புக் கொள்கைகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மொழிபெயர்ப்புக்குக் கடைப்பிடிக்க வேண்டிய சில
விதிகளைப் பற்றிச் சொல்கிறது. மொழிபெயர்ப்பின் தன்மை
பற்றிக் கூறுகிறது. மொழிபெயர்ப்பில் பொருளும் நடையும்
பெறும்     இடம்     பற்றிப் பேசுகிறது. மேனாட்டுக்
கொள்கையாளர்களைப் பட்டியல் இடுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
மொழிபெயர்ப்பு விதிகளை அறிந்து கொள்ளலாம்.
மொழிபெயர்ப்பின் தன்மையை மதிப்பிடலாம்.
பொருளும் நடையும் பற்றி அறியலாம்.
மேனாட்டுக்     கொள்கையாளர்களின்     பெயர்களை
அறியலாம்.