பாடம் - 2

P20122 இலக்கிய மொழிபெயர்ப்பு - வரலாறு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் ஒரு மொழியின் இலக்கியச் செழுமைக்கு
மொழி பெயர்ப்புகளும் துணை செய்கின்றன என்று கூறுகிறது.
இதற்குச் சான்றாக இலக்கிய வகைகள் தமிழ் இலக்கிய
வரலாற்றின்     பல்வேறு     காலங்களில்     எப்படி
மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் தமிழ்மொழிக்குப்
பெயர்க்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்த பிறகு நீங்கள் கீழ்க்காணும்
பயன்களைப் பெறமுடியும்.

தமிழ்மொழியுடன் தொடக்கக் காலத்தில் தொடர்பு
கொண்டிருந்த மொழிகள் பற்றி அறியலாம்.
அம்மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பாகவும்
தழுவலாகவும் அமைந்த இலக்கியங்கள் எவை என்பதை
அறியலாம்.
தமிழில் எழுந்த இலக்கியங்களில் அம்மொழிகளின்
சொல், பொருள் அடிப்படையிலான தாக்கத்தை
அறியலாம்.
மொழிபெயர்ப்புக்குப் பழைய இலக்கண நூலான
தொல்காப்பியம் கூறும் வரையறைகளை அறியலாம்.
பேரிலக்கியங்களில் பிறமொழிகளின் செல்வாக்கை
அறியலாம்.
தமிழிலிருந்து பெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் குறித்து
அறியலாம்.
பிற்காலத்து இலக்கிய வகைகளில் இந்திய மொழிகள்,
திராவிட மொழிகள், உலக மொழிகள் ஆகியன
ஏற்படுத்திய தாக்கத்தை அறியலாம்.