தன்மதிப்பீடு : விடைகள் - I

6.

பகவத் கீதை மொழிபெயர்ப்பு வரலாற்றைச் சுருக்கமாக
எழுதுக.

பகவத் கீதையைத் தமிழாக்க முயற்சி செய்தவர்கள் அதன்
கருத்துகளைச் சுருக்கமாகவும், விளக்க உரையாகவும்,
கருத்துக் கோவையாகவும் வெளியிட்டுள்ளனர்.

கி.பி. 1786 இல் முதன்முதலாக இந்நூலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளனர்.     தமிழில்     பாரதியார்
மொழிபெயர்ப்புக்கு முன்னர் சுமார் 14 நூல்கள்
வெளிவந்துள்ளன.

அவை அனைத்தும் செய்யுள் வடிவில் புலவர்களுக்கும்
கற்றோருக்கும்     மட்டும்     புரியும்     வண்ணம்
இயற்றப்பட்டனவாக இருந்தன.

முன்