பாடம் - 3

P20123 பிற துறை மொழிபெயர்ப்புகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழில் இலக்கியத்துறை தவிர அறிவியல். ஆட்சி,
சட்டம். போன்ற பிற துறைகளில் மொழி பெயர்ப்பு எவ்வாறு
செய்யப் பட்டுள்ளது என்பதைப்பற்றி விளக்குகிறது. பிற
துறைகள் தொடர்பான மொழி பெயர்ப்பில் இதழ்கள்
ஆற்றியுள்ள பங்களிப்பு, கலைச்சொல் ஆக்கங்கள் பற்றியும்
இந்தப்பாடம் தெரிவிக்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பிறதுறைக் கலைச் சொல்லாக்கங்களில் இதழ்களின்
பணியை அறியலாம்.
அறிவியல் நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றின்
மொழிபெயர்ப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.
தொடக்கக் கால மொழி பெயர்ப்புப் பணிகள் பற்றி
அறிந்து கொள்ளலாம்.
பிறதுறைகளில் ஆட்சி, சட்டத்துறை ஆகியவை
தொடர்பான மொழி     பெயர்ப்புகளைத் தெரிந்து
கொள்ளலாம்.
மொழி     பெயர்ப்புப்பணிகளில்     பல்கலைக்
கழகங்கள், பதிப்பகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின்
பங்களிப்பை மதிப்பிடலாம்.