தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

பிற துறை மொழிபெயர்ப்பில் இதழ்களின் பங்களிப்பு
என்ன?

தகவல் தொடர்புச் சாதனங்களில் முக்கியமானதும்
முதன்மையானதுமாகிய     இதழ்கள்     இந்தச்     சில
நூற்றாண்டுகளில்     செய்திகளை     வெளியிடுவதனைக்
கடமையாகக் கொண்டிருந்தன. அவற்றுடன் அறிவியல்
செய்திகளையும் வெளியிடுவது அவற்றின் பணிகளில்
ஒன்றாக இருந்தது. சில நேரம் அறிவியல் செய்திகளை
மட்டுமே தாங்கிய இதழ்களும் வெளிவந்துள்ளன.

தமிழில் இலக்கியம், சமூகம் தவிர்த்த பிற துறைகளான
மருத்துவம், சட்டம், வணிகம், தொழில், சோதிடம், கல்வி,
அறிவியல், கிராம நலம், வெளிநாட்டுத் தகவல், உள்நாட்டு
வளர்ச்சி, திரைப்படம் போன்ற துறைகளிலும் பெருவாரியான
இதழ்கள் வெளிவந்துள்ளன.

சட்டத்துறை சார்ந்த செய்திகளைத் தமிழிலும்
மொழிபெயர்ப்பாகவும் வெளியிட்ட இதழ்களைக் காணலாம்.

வணிகச் செய்திகள். வணிக வரிச் செய்திகள் எனப்பல
செய்திகளை வெளியிட்ட இதழ்களாகப் பின்வரும்
இதழ்களைக் காண முடிகிறது. வர்த்தகமித்திரன்,
தனவணிகன்
(1930), வர்த்தக ஊழியன் (1932),
வியாபாரக்குரல் (1954), வர்த்தகக் குரல் (1964), வணிகச்
செய்தி
(1949), விற்பனைவரித் தகவல் (1964), வர்த்தக
உலகம்
(1967).

முன்