பாடம் - 4

P20124 இக்கால இலக்கிய மொழிபெயர்ப்புகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழ் இலக்கிய வரலாற்றில் மொழிபெயர்ப்பு நூல்கள்
பெறுகின்ற     இடம்     பற்றியும்     தற்காலத் தமிழ்
மொழிபெயர்ப்புகளாக     அமைந்துள்ள     இலக்கியங்கள்
பற்றியும் அறிவிப்பதாக இப்பாடம் அமைந்துள்ளது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தற்காலத்தில்     இடம்பெறும்     மொழிபெயர்ப்பு
முயற்சிகளை அறிந்து கொள்ளலாம்.
மொழிபெயர்ப்பு     வாயிலாக உலகில் வழங்கும்
மொழிகளை, அவற்றின் இலக்கியங்களை அறியலாம்.
உலக மொழிகளில் உள்ள இலக்கியங்கள் தமிழ் மொழி
பேசுவோருக்கு அறிமுகமான விதத்தை அறியலாம்.
இந்தியாவிலேயே உள்ள வட இந்திய மொழிகளிலிருந்து
தமிழிற்கு வந்த மொழிபெயர்ப்புகளை அறியலாம்.
திராவிட மொழிகள் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்த
இலக்கியங்களை அறியலாம்.
தற்கால அமைப்பு நிலையிலான முயற்சிகளையும்
அறியலாம்.