மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்கின்ற சிக்கல்களை
இந்தப் பாடம் எடுத்துரைக்கிறது. இலக்கிய மொழிபெயர்ப்பில்,
அறிவியல் மொழிபெயர்ப்புகளில், சட்டம், ஆட்சி, நிர்வாகம்
போன்ற துறைசார்ந்த மொழிபெயர்ப்புகளில், இதழியல்
துறைகளில் குறிப்பாக ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்புகளில்
இயல்பாக எதிர்ப்படும் சிக்கல்களைக்கூறி, அவற்றைத்
தீர்க்கும் வழிமுறைகளையும் பற்றி இந்தப் பாடம் விளக்க
முற்படுகிறது.
|