5,6 தொகுப்புரை


     நண்பர்களே! இதுவரை விளம்பர மொழிபெயர்ப்புகள் பற்றிய
சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தைக் கற்றதன்
மூலம் தங்கள் மனதில் பதிவாயிருக்கும் தகவல்களை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

  • விரிந்திடும் பசுமைப் புல்வெளி போல விளம்பர
    மொழிபெயர்ப்புகள் பற்றிய நுணுக்கமான செய்திகள் உங்களுக்குள் பரவியிருப்பதனை உணர்வீர்கள்.
  • விளம்பர மொழிபெயர்ப்புகளின் தன்மைகள், விளம்பர
    மொழி பெயர்ப்பில் பயன்படும்     தமிழ்ச்சொற்கள்,
    தொடரமைப்புகள், ஒலியன் மரபு மீறல், பிறமொழி்ச்
    செல்வாக்கு... போன்றன பற்றி இப்பாடத்தின் வழியே
    அறிந்திருப்பீர்கள்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. தமிழில்     விளம்பரங்கள்     எவ்வாறு
தயாரிக்கப்படுகின்றன?
2. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும்
பொழுது பொருள் மயக்கம் ஏன் ஏற்படுகிறது?
3. தமிழ் ஒலியன் மரபு எவ்வாறு விளம்பரங்களில்
மீறப்படுகிறது?