இந்தப் பாடம் திரைப்பட
மொழி பெயர்ப்புகளின் தன்மைகளையும்
இயல்புகளையும் விவரிக்கின்றது. மேலும் மொழிபெயர்ப்புகள்
வழியாகத் தமிழில் ஏற்படும் மாற்றங்களையும்
விளக்கி உள்ளது.
இந்தப்
பாடத்தைப் படித்தால் என்ன பயன்
பெறலாம்?
திரைப்படங்களுக்கும் மொழிகளுக்குமிடையிலான
உறவினை அறியலாம்.
திரைப்படங்களின்
தொடக்கக் காலத்தில் செயற்பட்ட
மொழி பெயர்ப்பாளர்களின் முயற்சிகள் பற்றி அறிய
இயலும்.
திரைப்பட
மொழி மாற்றம் (Dubbing)
பற்றி
விரிவாக அறிந்து கொள்ளவியலும்.
திரைப்படச்
சார மொழி பெயர்ப்பின் தன்மைகளை
அறிய முடியும்.
திரைப்பட
மொழிபெயர்ப்பின் மொழியமைப்புகள்,
சிறப்புகள் பற்றியும் அறியலாம்.