| |
சமயம்
என்பது சமைக்கப்படுவது என்ற பொருளில்
கடவுள் கொள்கைகளை வகுத்துரைப்பது ஆகும்.
இத்தகு
நிலையில் சைவ சமயத்தின்
கடவுள் கொள்கைகளாகிய
நெறிகளையும், அச்சமயத்தின் நடைமுறை
வழிபாட்டு
முறைகளையும் இப்பாடம் சுட்டிக் காட்டுகின்றது.
உலகச்
சமயங்களில் தொன்மைச் சமயமான
சைவ சமயத்தின்
வழிபாடு உருவ வழிபாடாக அமைந்ததாகும்.
காணப்படாத
சிவமாகிய கடவுளுக்கு அவனருள்
பெற்ற ஞானிகள்
உய்த்துணர்ந்த வடிவத்தை அமைத்துச் சைவசமயம்
வழிபடுகிறது. அவ்வழிபாட்டில் அமைந்த நெறிமுறைகளை
இப்பாடம் குறிப்பிடுகிறது. |