| |
சைவ
சமயத்தின் தத்துவக் கொள்கைகளை விளக்கும்
நூல்கள் 14 ஆகும். இவை சாத்திர நூல்கள் எனப் பெயர்
பெறும். இந்நூல்கள் மூலம் பதி, பசு, பாசம் என்ற மூன்றின்
தத்துவங்கள் விளக்கப் பெறுகின்றன. பதி என்பது
இறைவனையும், பசு என்பது உயிரினையும், பாசம் என்பது
உயிர்களில் உள்ள மலங்களையும் குறிக்கும்.
சாத்திர நூல்கள்
14 என்றாலும் அவற்றில் கூறப்பெறும் செய்திகள்
ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அந்நூல்களில் உயிர்கள்
அனுபவிக்கும் வினைக் கொள்கைகள் விளக்கப்பட்டுள்ளன.
பதி என்னும் இறைவனுடைய தொழில்கள் கூறப்பெற்றுள்ளன;
உயிர்களின் பிறப்பும் முக்தியும் தத்துவ அடிப்படையில் தரப்
பெற்றுள்ளன.
இவற்றையெல்லாம் இப்பாடம் விளக்குகிறது. |