|
கீழை நாட்டவராகிய
இந்தியருக்குத் தத்துவ ஞானம்
பரம்பரைச் சொத்தாகும். பரம்பரை பரம்பரையாக முன்னோர்கள்
தேடிவைத்த செல்வமாக விளங்குவன தத்துவங்களாகும்.
தத்துவங்களின் அமைப்பில் உள்ள சிற்சில வேறுபாடுகளால்
பல்வேறு சமயங்கள் இந்தியாவில் வழங்கி வருகின்றன. இந்தியச்
சமயங்கள் பலவற்றுள் ஒன்று சைவம். அச்சமயத்தின்
தத்துவங்கள் சித்தாந்தம் எனப்படும். சைவ சித்தாந்தத்தின்
தத்துவங்களைப் பற்றிய குறிப்புகள் இப்பாடத்தில் இடம்
பெற்றுள்ளன.
சைவத்தின் தத்துவங்கள் மிகப் பழமையானவை.
அவற்றைத் தோத்திர நூல்களும், சாத்திர நூல்களும்
வரையறுத்துத் தந்துள்ளன. அவற்றின்வழி
சைவ சித்தாந்தத்
தத்துவங்களை
உணர முடிகிறது. அவற்றை வரையறுத்து
எளிமையாக்கி இந்தப் பாடம்
தருகிறது. |