|
சமண சமயத் தத்துவங்களையும் தத்துவக் குறியீட்டையும்
கற்றுணர்ந்த மாணவர்களே! இப்பொழுது நீங்கள் சமணர்களின்
ஒழுக்க நெறிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
சமணர்கள் வாழ்க்கையைச் சாவக தர்மம் அல்லது
சிராவக தர்மம் என்றும் யதிதர்மம் என்றும் இரண்டாகப்
பாகுபடுத்துவர். முன்னது இல்லறத்தார் (மனைவி மக்களுடன்
வாழும் வாழ்க்கை) ஒழுக்கம்; பின்னது முனிவரது ஒழுக்கம்.
4.3.1 சமணத் துறவிகளின் ஒழுக்கங்கள்
முதற்கண் சமண முனிவர்களின் ஒழுக்கங்களைச்
சுருக்கமாகக் காணலாம். சமண முனிவர்கள் பிறவியை நீக்கி,
வீடுபேறு அடைவதை நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்கள்.
இவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் 28. அவை:
| மாவிரதங்கள் |
- |
5 |
| சமிதி |
- |
5 |
| ஐம்புலன் அடக்கம் |
- |
5 |
| ஆவஸ்யகம் |
- |
6 |
| லோசம் |
- |
1 |
| திகம்பரம் |
- |
1 |
| நீராடாமை |
- |
1 |
| பல்தேய்க்காமை |
- |
1 |
| தரையில் படுத்தல் |
- |
1 |
| நின்று உண்ணல் |
- |
1 |
| ஒரே ஒரு வேளை உண்ணல் |
- |
1 |
|
|
|
| |
|
28 |
|
|
|
4.3.2 மாவிரதங்கள்
சமண முனிவர்கள் அகிம்சை, வாய்மை, கள்ளாமை,
பிரமசரியம் (துறவு), அவா அறுத்தல் ஆகிய ஐந்து
கொள்கைகளை மனம், மொழி, மெய்களால் நீங்காது கடைப்பிடிப்பர்.
இவையே மாவிரதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அவை:
4.3.3 சமிதிகள்
மாவிரதங்களைப் போலவே சமிதிகளும் ஐந்து. அவை:
4.3.4 ஆவஸ்யகம்
ஆவஸ்யகம் என்பது பின்வரும் ஆறு பிரிவுகளை
உள்ளடக்கியது ஆகும்.
4.3.5 எஞ்சிய ஒழுக்கங்கள்
சமண முனிவர்கள் தங்களின் உடலை வைத்துக் கொள்ளும்
முறைகளைப் பற்றியவையாக எஞ்சிய ஏழு ஒழுக்கங்கள் உள்ளன.
அவை:
● லோசம்
மயிர் களைதல் அதாவது சமண முனிவர்கள் தீட்சை
பெறுவதற்கு முன்பு உண்ணா நோன்பு இருந்து தம் தலை
முடியைக் (தலை மயிரைக்) கைகளால் பிடுங்கி நீக்குதல்.
● திகம்பரம்
சமண முனிவர்கள் நிர்வாணமாக (ஆடை, அணிகலன்
முதலிய எவையும் இல்லாது) இருத்தல்.
● தரையில் படுத்தல்
சமண முனிவர்கள் பாய், படுக்கையைப் பயன்படுத்துவது
இல்லை. வெறும் தரையில் படுத்து உறங்குவர். இடப்பக்கமோ
வலப்பக்கமோ சாய்ந்து படுப்பர். குப்புறப் படுப்பதோ மல்லாந்து
படுப்பதோ கூடாது.
● பல் தேய்க்காமை
சமண முனிவர்கள் குளிக்காமல் இருப்பதைப் போலவே
பல் தேய்க்காமலும் இருப்பர். சமணர்கள் குளிக்காமலும், பல்
தேய்க்காமலும் இருப்பதற்குக் காரணம் உடம்பை ஒரு பொருளாக
மதித்துப் போற்றுவது அவர்களுக்குக் கிடையாது.
● நின்று உண்ணல்
சமண முனிவர்கள் பிச்சை ஏற்ற உணவைக் கையில் ஏந்தி
நின்றவாறு உண்ண வேண்டும். பாத்திரங்களில் வைத்துக் கொண்டு
அமர்ந்து உண்ணக் கூடாது.
● ஒரே ஒரு வேளை உண்ணல்
சமண முனிவர்கள் பகல் நேரத்தில் ஒரே ஒரு வேளை
(முறை) மட்டும் உணவு உண்ணுவர்.
மேலே கூறிய 28 ஒழுக்கங்களையும் சமண முனிவர்கள்
தவறாமல் பின்பற்றி நடக்க வேண்டும்.
|