p20236 தத்துவ விளக்கம்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
E

    இந்தப் பாடம் பௌத்த மதத் தத்துவங்கள் பற்றி
விவரிக்கிறது. பன்னிரண்டு நிதானங்கள் பற்றிய செய்திகளை,
ஊழ் வட்ட விளக்கப் படத்துடன் எடுத்துக் கூறுகிறது. மனித
உயிர்களின் துன்பங்களுக்குக் காரணங்கள், அவற்றிலிருந்து
விடுபட்டு வீடுபேறு அடைவதற்குப் பௌத்தர்கள் கூறும்
நான்கு சத்தியங்கள் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக்
கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் மனித வாழ்க்கை
சக்கரம் போலச் சுழன்று வருகிறது என்பதையும் உலக
உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் சிக்கித்
தவிக்கின்றன என்பதையும் உணரலாம்.

    பிறவித் துன்பத்திற்கான காரணங்கள் பற்றி அறிந்து
கொள்ளலாம். பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு
உரிய வழி முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    பௌத்த மதத்தின் தத்துவக் கருத்துகளைப் புரிந்து
கொண்டு, இயன்றவரை நம் வாழ்வில் அவற்றைப் பின்பற்றி
வாழ முயற்சி செய்யலாம்.


பாட அமைப்பு