P20313 - மரபுக்கவிதை வடிவம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
     மரபுக்கவிதை இயற்றுவதற்கான அடிப்படை யாப்பிலக்கணக்
கருத்துகளை எடுத்துரைக்கின்றது. பா வடிவங்கள் குறித்துச்
சான்றுடன் விளக்குகின்றது. பாவின வடிவங்கள் குறித்த
வாய்பாடுகளைச் சான்று காட்டி விவரிக்கின்றது. இன்றியமையாத
புணர்ச்சி விதிகளைக் குறிப்பிடுகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
செய்யுளை அலகிடும் முறை குறித்து அறிந்து கொள்ளலாம்.
பா வகைகளின் இன்றியமையாத இலக்கணம் குறித்துத்
தெரிந்து கொள்ளலாம்.
பாக்களை இன்ன வகையின என இனம் காணும்
பயிற்சியைப் பெறலாம்.
பாவினங்களின் பல்வேறு வாய்பாடுகளையும், சந்தங்களையும்
தெரிந்துணரலாம்.

புதிதாக மரபுக்கவிதையைப் படைப்பதற்கான அறிவையும்
தெளிவையும் பெறலாம்.