|
மனிதன் சமூகமாகக் கூடி வாழும் ஒரு
பிராணி என்பர்
அறிஞர். கூடி வாழும் போது மகிழ்ச்சியில் ஆடிப்பாடும்
பழக்கமும், துக்கத்தில் அழுது பாடும் பழக்கமும் ஏற்பட்டது.
மகிழ்வும், துக்கமும் மனிதனுக்கு உணர்ச்சியை மேம்படுத்தின.
அப்போது அவன் உள்ளத்தில் கற்பைனயும் மிகுந்தது. உணர்வு
வயப்பட்ட மனிதன் உணர்ச்சியையும், கற்பனையையும்
இணைத்து வடிவம் கொடுத்துப் பாடுவான். அதுதான் தொடக்க
காலப் படைப்பிலக்கியமாகும். |