தன்மதிப்பீடு : விடைகள் - I

(1)

பாத்திரப் படைப்பின் இன்றியமையாமையைக் குறிப்பிடுக.

    நாவலின் பாத்திரப் படைப்புதான் ஒரு கதையை
உயிரோட்டமாக வைத்திருப்பதற்கு அடிப்படையாகும்.

    நாவல் பாத்திரங்களின் வாயிலாகத்தான் கதையைக்
கூறுகிறது. பாத்திரங்கள் இல்லையேல் கதை இல்லை.
கதைப் பின்னல் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நாவலில்
உயிரோட்டமாக இருப்பது பாத்திரப் படைப்பே ஆகும்.

முன்