இந்தப் பாடம்
தொன்மை நாடகங்களைப் பற்றிக்
குறிப்பிடுகிறது. கல்வெட்டுக்களில்
நாடகங்கள் பற்றிய
குறிப்புக்களை எடுத்துரைக்கிறது.
சிற்றிலக்கியங்கள்வழி
நாடகம் சிறப்புடன்
வளர்ந்ததையும்,
நாட்டுப்புறக்
கூத்துகள்
நாடகம் வளர உதவியதையும் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்?
தமிழின் தொன்மையான
நாடகங்களைத்
தெரிந்து
கொள்ளலாம்.
சிற்றிலக்கிய வகை நாடகங்களை
அறிந்து கொள்ளலாம்.
நாட்டார் கலைகள்
நாடகமாக விளங்கியதையும்,
எழுதப்பட்ட நாடகங்கள்
16ஆம்
நூற்றாண்டிலிருந்து
எழுந்ததையும் தெரிந்து
கொள்ளலாம்.