|
2. |
‘உள்ளடக்கம்’ என்பது யாது? செய்தித்தாளின் உள்ளடக்கங்கள் ஐந்தைக் குறிப்பிடுக. |
செய்தித்தாளின் பக்க அமைப்பாகிய சட்டத்திற்குள் வரும் பல்வேறு வகையான செய்தியும் சுவையும் கூடிய பகுதிகளே ‘உள்ளடக்கம்’ எனப்படும். சிந்திக்கத் தூண்டும் தலையங்கம், துணுக்குகள், கருத்துப்படங்கள், பல்வேறு வகை அட்டவணைகள், விளம்பரங்கள், வானிலை அறிக்கை, விளையாட்டுச் செய்திகள், விலைவாசி நிலவரம் முதலிய பல்வேறு வகையான குறிப்புகளும் உள்ளடக்கங்கள் ஆகும். |