| 1.2 பக்க அமைப்பில் கவனிக்க
வேண்டியவை |
செய்தித்தாளின் ஒவ்வொரு பக்கமும்
படிப்பவர்களை
ஈர்க்கும்
வண்ணம் அமைதல் வேண்டும். செய்தித்தாளின் ஒரு
பக்கத்தின் மேற் பகுதியை விரும்பிப் படிக்கும் படிப்பவர்கள்
கீழ்ப்பகுதியை அவ்வளவாகக் கவனிக்காமல் விட்டு விடலாம்.
எனவே கீழ்ப்பகுதியிலும் சிறப்பாக அமைக்க வேண்டும்.
ஒரு
பக்கத்தில் ஒரு செய்திப்பகுதி முடியாமல் இருக்குமானால்
அதன் தொடர்ச்சி எந்தப் பக்கத்தில் எந்தப் பத்தியில்
வருகிறது என்பதை மறக்காமல் ‘தொடர்ச்சி ... ஆம் பக்கம்,
...ஆம் பத்தி’ என்பது போல் குறிப்பிட வேண்டும். ஒரே
மாதிரியான செய்திகள் மீண்டும் மீண்டும் ஒரே பக்கத்தில்
வந்தால் படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டலாம். மேலும் பக்க
அமைப்பு மற்ற
இதழ்களின் பக்க அமைப்பிலிருந்து வேறுபட்டு
இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. அப்போதுதான்
மக்கள் விரும்பி வாங்கிப் படிப்பார்கள்.
பக்க அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கப்பட
வேண்டியவை பத்தி அமைப்பும், பக்க
அளவும், அதில் இடம்
பெறும் எழுத்து அளவுமேயாகும்.
 |
பத்தி அமைப்பு |
இயல்பான அளவு கொண்ட செய்தித்தாளில் எட்டுப்
பத்திகளும்,
சிறிய அளவு கொண்ட செய்தித்தாளில் ஐந்து
பத்திகளும் இருக்கக்
காணலாம். 6,7 பத்திகள் அமைந்த
நாளேடுகளே மிகுதி
என்பதையும் அறிய முடிகிறது. ஒரே
பக்கத்தின் மேல்
பகுதியில் 6 பத்திகளும் கீழ்ப்பகுதியில் 7
பத்திகளும்
கூட
அமைவது உண்டு. வசதிக்கு ஏற்றாற்போலவும்
செய்திகளின்
முக்கியத்துவத்தைப் பொறுத்தும் இவை
வேறுபடலாம். சில
குறிப்பிட்ட செய்தி இதழ்கள் சில
குறிப்பிட்ட பத்திகளை மிக
முக்கியமான செய்திகளுக்காக
என்று ஒதுக்கீடு செய்தும்
வைத்துக் கொள்ளலாம். நாலைந்து
பத்திகள் சேர்ந்து ஒரே
விளம்பரம் பெரிதாக வருவதும்
உண்டு.
 |
பக்க அளவு |
செய்தித்தாள்கள் பொதுவாக இரண்டு அளவுகளில்
வெளிவருகின்றன.
| (1) |
இயல்பான அளவு
கொண்டவை 21 அங்குல நீளமும்
14-15 அங்குல அகலமும்
கொண்டவை
ஆகும். |
| (2) |
சிறிய அளவு கொண்டவை 14-16 அங்குல நீளமும் 10
அங்குல அகலமும் கொண்டவை ஆகும். |
 |
எழுத்து அளவு |
ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு வகை எழுத்து
கையாளப்படுகிறது. இவ்வெழுத்து வகைகளைப் புள்ளி என்ற
அளவுப் பெயர் கொண்டு குறிப்பிடுவது வழக்கம். ஒரு புள்ளி
என்பது
1/72 அங்குலமாகும்.
ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு அளவான எழுத்து
உண்டு. 5 புள்ளி முதல் 72 புள்ளி வரையிலான
எழுத்துகள்
அமைய முடியும்.
ஒரு நாளேடு படிப்பவர்களைக் கவர்வதற்கு உதவி செய்யும்
கூறுகளில் மிக முக்கியமானவை செய்தித் தலைப்பும் பக்க
அமைப்பில் இடம்பெறும் படங்களுமே ஆகும்.
 |
செய்தித் தலைப்பு |
செய்தித் தலைப்புகள் பல வகைப்படுகின்றன. ஏறக்குறைய
12 வகை உள்ளன. தலைமைத் தலைப்புகள் பொதுவாக
முதல்பக்கத்தில் அமையும். செய்தித் தலைப்புகள் ஒவ்வொரு
செய்தியின் மேலும் தலைப்பாக அமைகின்றன. தலைப்புகளில்
பெரிய எழுத்துகள் பயன்படுத்தப் படுகின்றன. தினத்தந்தி,
மாலைமுரசு போன்ற நாளேடுகளில் மிகப் பெரிய எழுத்துகள்
தலைப்புச் செய்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
செய்திகளைப் படிக்கும் ஆர்வம் இல்லாதவர்களும்
தலைப்புகளைப் பார்த்துச் செல்வார்கள். மாநில மொழி
இதழ்களில் பெரும்பாலும் உள்நாட்டுச் செய்திகள்
முக்கியமானதாக இருக்கும். ஆங்கிலச் செய்தித் தாள்களில்
பெரும்பாலும் வெளிநாட்டுச் செய்திகள் முக்கிய இடத்தைப்
பெறக் கூடும். ஆனால் எந்த மொழி நாளேடாக இருந்தாலும்
அன்றைய
பரபரப்பான செய்தியே முக்கிய இடத்தைப்
பெறுகிறது.
 |
படங்கள் |
செய்தித்தாள்களில் படங்கள் செய்திகளுக்காகவும்,
விளம்பரங்களுக்காகவும், கருத்துப்படங்களாகவும் (Cartoons),
தொடர்கதைக்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை
நிழற்படமாகவும் (Photo) இருக்கும், வரைபடமாகவும்
(Picture) இருக்கும், கேலிச் சித்திரமாகவும்
இருக்கும். இவை
பொருத்தமான இடங்களில் அமைக்கப்பெறும்.
 |
பிற |
ஒரு செய்தித்தாளின் பக்க அமைப்பில்
குறிப்பிடத்தக்கவை வேறு சிலவும் உண்டு. அவை தொடர்
சுவைப்பகுதிகள், தலையங்கம், கடிதங்கள், மதிப்புரைகள்,
கட்டுரைகள் போன்றவை ஆகும். இவை பெரும்பாலும் இடம்
மாற்றாமல் எடுத்தவுடன் பிரித்துப் படிக்கின்றாற்போலத்
தொடர்ச்சியாக வரும். |